புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-05-24 19:18 GMT

இலுப்பூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விளாப்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெட்டிக்கடை உரிமையாளர் மேலப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது 55) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடமிருந்து 30 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்