சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்கு
திசையன்விளை அருகே விபத்துகளை தடுக்க வைத்திருந்த இரும்பு தடுப்புகளில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் சந்திப்பு, மன்னார்புரம் ஜங்சன், வடக்கு விஜயநாராயணம் நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்துகளை தடுக்க திசையன்விளை போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். அவற்றின் மீது கட்சி விளம்பர சுவரொட்டிகளை ஒட்டியதாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மீது திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.