முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு

முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-06-12 19:03 GMT

தரகம்பட்டி அருகே உள்ள புங்கம்பாடி பகுதியை சேர்ந்த ஒருவர், கடவூர் பகுதியை சேர்ந்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து உள்ளார். இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் வாட்ஸ்-அப் மற்றும் முகநூலில் இடையப்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 37) என்பவர் அவதூறு பரப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் சுரேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்