பந்தல் அமைப்பாளர்கள் மீது வழக்கு

சங்கரன்கோவிலில் பந்தல் அமைப்பாளர்கள் 2பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-09-16 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பஸ்நிலையம் அருகே அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தி.மு.க.விற்கு சங்கரன்கோவில் காந்திநகரைச் சேர்ந்த சுரேஷ் (வயது 32) என்பவர் பந்தல் அமைத்துக் கொடுத்திருந்தார்.

இதேபோல் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற விழாவிற்கு கோமதியாபுரம் தெருவை சேர்ந்த நீதிராஜ் என்பவர் பந்தல் அமைத்துக் கொடுத்திருந்தார். இந்நிலையில் சாலையின் இயற்கை அழகை சீர்குலைத்து பந்தல் அமைத்ததாக சுரேஷ், நீதிராஜ் ஆகிய 2 போ் மீதும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்