ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன. இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் சூதாட்ட சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்கள் காரணமாக 32 பேர் தற்கொலை செய்த நிலையில் சட்டம் அவசியம் ஆகிறது என்று தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதேவேளையில்,இந்த தடை சட்டத்தின் படி கடும் குற்ற நடவடிக்கைகள் எடுப்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஆன்லைன் நிறுவனங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த சென்னை ஐகோர்ட், வரும் 13 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது.