மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிப்பு

மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிப்பு

Update: 2023-03-31 18:45 GMT

போத்தனூர்

இரவில் செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டுவதாக கோவை பெண் அளித்த புகாரின் பேரில் மும்பை தொழில் அதிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பெண் பரபரப்பு புகார்

மும்பை செம்பூரில் வசிக்கும் ராஜேஷ் (வயது 44). இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம். தொழில் அதிபரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்தில், போத்தனூரை சேர்ந்த ேஹசல் ஜேம்ஸ் (27) என்ற பெண் தன்னிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகார் தெரிவித்தார். அதன்பேரில் ஹேசல் ஜேம்ஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்தநிலையில் ேஹசல் ஜேம்ஸ், போத்தனூர் போலீஸ் நிலையத் தில் தொழில்அதிபர் ராஜேஷ் மீது அளித்த பரபரப்பு புகாரில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், வெங்கடேஷ் மகன் தர்மதுரை என்பவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டோம். நான் எனது தந்தை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு எனது உறவினர் ஒருவர் மூலம் மும்பையை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் ராஜேஷ் அறிமுகம் ஆனார். அவரிடம், சொந்தமாக அழகு சாதன பொருட்கள் மற்றும் கார்மெண்ட்ஸ் நடத்தி வருவதாக நான் கூறினேன்.

ஆபாசமாக பேசினார்

இதைத்தொடர்ந்து அவர், நாம் 2 பேரும் சேர்ந்து இந்த தொழி லை நடத்தலாம் என்று கூறினார். அதன்படி அவர் மும்பையில் இருந்து பொருட்களை வாங்கி கோவைக்கு அனுப்பி வைப்பார். அதை நான் விற்பனை செய்து வந்தேன். இந்த வியாபாரம் தொடர்பாக அவர் என்னிடம் செல்போனில் பேசி வந்தார்.

இந்தநிலையில் நாட்கள் செல்ல, செல்ல ராஜேஷ் என்னிடம் ஆபாசமாக பேச தொடங்கினார். நான் அதை கண்டித்தேன். ஆனாலும் அவர் தொடர்ந்து என்னிடம் ஆபாசமாக பேசி வந்தார். எனவே நான் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தேன். மேலும் அவரின் செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டேன்.

தொழில் அதிபர் மீது வழக்கு

இதையடுத்து அவர் மும்பையில் இருந்து பொருட்கள் அனுப்பு வதை நிறுத்தினார். அதன்பிறகு அவர் வேறு செல்போன் எண்களில் இருந்து இரவு நேரங்களில் என்னிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசி மிரட்டுகிறார். மிரட்டல் ஆடியோவும் விடுத்து உள்ளார். இது குறித்து எனது கணவரிடமும் கூறி உள்ளார். மேலும எனது கணவருடன் சேர்ந்து என்னை மிரட்டுகிறார். எனவே ராஜேஷ் மற்றும் எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்..

அதன் பேரில் ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ராஜேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்