லாரி டிரைவர் மீது வழக்கு
மின் கம்பங்களை சேதப்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
தேனி அருகே உள்ள சங்ககோணாம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். லாரி டிரைவர். இவர் கடந்த மாதம் 26-ந்தேதி ஜங்கால்பட்டி-கோவிந்தநகரம் சாலையில் லாரியை ஓட்டிச்சென்றார். அப்போது அவரது லாரி, சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின் கம்பங்கள் மீது மோதியது. இதில், 5 மின்கம்பங்கள் சேதமடைந்தது. இதுகுறித்து காமாட்சிபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார், வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.