நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்கு

மோதலை தூண்டும் வகையில் பேசியதாக வந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-04-27 07:28 GMT

கோவை,

நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது கோவை உக்கடம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2022 டிச.6ல் உக்கடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோதலை தூண்டும் வகையில் பேசியதாக வந்த புகார் எழுந்தது. தேச நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

எனவே இடும்பாவனம் கார்த்திக்கை எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்