காதல் மனைவிக்கு தெரியாமல்2-வது திருமணம் செய்த கணவர் மீது வழக்கு

காதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-09 18:45 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள ஈச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார். இவரும், அதே ஊரை சேர்ந்த அபிதா(வயது 23) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அஜித்குமார், தனது தந்தை சங்கர், தாய் அஞ்சலி ஆகியோருடன் சேர்ந்து கொண்டு அபிதாவிடம் நகை, பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அபிதாவை, 3 பேரும் வீட்டை விட்டு விரட்டியடித்ததாகதெரிகிறது.

இந்த நிலையில் அஜித்குமார் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதாக அபிதாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் அஜித்குமாரை சந்தித்து நியாயம் கேட்டுள்ளார். அப்போது அஜித்குமார், தனது பெற்றோர் உள்ளிட்ட 4 பேருடன் சேர்ந்து அபிதாவை திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அபிதா, 2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அஜித்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்