தலைமை ஆசிரியர் மீது வழக்கு
திருநாவலூர் வட்டார கல்வி அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே தேவியானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 58). மேப்புலியூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து வந்தார். சம்பவத்தன்று திருநாவலூர் வட்டார கல்வி அலுவலகத்தில் நடந்த ஒரு பிரச்சினை தொடர்பாக திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கல்வித்துறை, சேகரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதில் ஆத்திரமடைந்த சேகர், மீண்டும் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்து மேஜை, கணினி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் சேகர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.