பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை-முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2023-07-20 21:40 GMT

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 43). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது மதுரை விமான நிலையத்தில் காவலாளியாக உள்ளார். சம்பவத்தன்று 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் முன்னாள் ராணுவவீரர் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்