மனைவியின் கழுத்தை பிளேடால் கிழித்த கட்டிட தொழிலாளி மீது வழக்கு
மனைவியின் கழுத்தை பிளேடால் கிழித்த கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி பாலக்கரை தர்மநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெபமாலைராஜ் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேணுகாதேவி (41). சம்பவத்தன்று இவர் சாலைரோடு பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சாப்பிட சென்றார். அப்போது, அங்கு வந்த ஜெபமாலைராஜ் தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் ரேணுகாதேவியின் கழுத்தின் இடது பகுதியில் பிளோடல் கிழித்து விட்டார். இதில் ரேணுகாதேவி லேசான காயத்துடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ரேணுகாதேவி கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் ஜெபமாலைராஜ் மீது பெண்ணை கொடுமை செய்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.