சங்ககிரி:-
சங்ககிரி அருகே வைகுந்தம் வெள்ளையம் பாளையம் ரங்கன்வளவு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). விவசாயி. இவருக்கும், இவருடைய அண்ணன் ஜெயபாலுக்கும் சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அண்ணன், தம்பி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால், ராஜேந்திரனை அடித்து கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் மனைவி மல்லிகா (47), மகன் சசிகுமார் (29) ஆகியோரையும் ஜெயபால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். உடனே அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சங்ககிரி போலீசார் ஜெயபால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.