ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்கு

திண்டுக்கல்லில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றபோது போலீசார் மற்றும் அரசு மருத்துவமனை ஊழியர்களை அவதூறாக பேசிய ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-08-19 15:49 GMT

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 35). இவர், ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ்காரராக இருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர், திண்டுக்கல் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல்லில் பணியாற்றி வரும் இவர், சம்பவத்தன்று சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்துக்கு தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.

சீலப்பாடி சாலையில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் காயமடைந்த தங்கபாண்டியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது போலீசார் மற்றும் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்களை தங்கப்பாண்டி அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில், திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்