அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கரூர் கோவை ரோட்டில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா புகார் கொடுத்தார். அதன்பேரில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட அ.தி.மு.க.வை சேர்ந்த பலர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.