மக்கள் அதிகாரம் அமைப்பினர் 60 பேர் மீது வழக்கு
மக்கள் அதிகாரம் அமைப்பினர் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காந்தி மார்க்கெட்:
கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பொய்யான செய்தியை பரப்பி வருவதாக கூறி அவரை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோாியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மரக்கடை மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தநிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 60 பேர் மீது காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.