சாலை மறியல் செய்த 60 பேர் மீது வழக்கு

தேனி அருகே சாலை மறியல் செய்த 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-12-19 19:00 GMT

தேனி அருகே பள்ளப்பட்டி மற்றும் கோபாலபுரம் ஒண்டிவீரன் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர், சில நாட்களுக்கு முன்பு தகராறில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த தகராறில் ஈடுபட்ட சிலரை கைது செய்யக்கோரி, கோபாலபுரத்தை சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் கோபாலபுரத்தில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் ஒண்டிவீரன் நகர் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக மறியல் செய்ததாக பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் சுமார் 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்