சவுடு மண் கடத்திய 6 பேர் மீது வழக்கு

இளையான்குடியில் சவுடு மண் கடத்திய 6 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-06-17 18:34 GMT

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள அயன்குறிச்சி கிராமத்தில் தனது சொந்த நிலத்தில் சவுடு மண் திருடப்பட்டுள்ளதாக மூங்கில் ஊருணியைச் சேர்ந்த முனியசாமி (வயது 50) என்பவர் இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தெ.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராம் சங்கர்(29), மஞ்சுநாதன் (58), சரவணன் (35), ஜெயராமன்(50), மோகன் (40), செந்தில் (45) ஆகிய 6 பேர் மீது டிராக்டரில் திருட்டுத்தனமாக சவுடு மணல் கடத்தியதாக இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செழியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்