விவசாயியை கல்லால் தாக்கிய 6 பேர் மீது வழக்கு

விவசாயியை கல்லால் தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-08-23 18:41 GMT

கடவூர் தாலுகா, வரவணை ஊராட்சி அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 39), விவசாயி. இவரது தோட்டத்தின் அருகே கணபதி ராஜு என்பவர் வீடு கட்டி வசித்து வருகிறார். இந்தநிலையில் கணபதி ராஜுவின் மனைவி தனலட்சுமி வெள்ளைச்சாமி தோட்டத்தில் இருந்த செடியில் இருந்து கொள்ளுவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட வெள்ளைச்சாமி தனலட்சுமியிடம் அது குறித்து கேட்டு உள்ளார். அப்போது வெள்ளைச்சாமியை கணபதி ராஜு, தனலட்சுமி உள்ளிட்ட 6 பேர் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த வெள்ளைச்சாமி கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணபதி ராஜு உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்