விவசாயியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

விவசாயியை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-22 20:00 GMT

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 51). விவசாயி. இவரை, தேனி அருகே வளையப்பட்டியில் நிலப்பிரச்சினை தொடர்பாக சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வளையப்பட்டியை சேர்ந்த மொக்கபாண்டி (55), குஞ்சன் (25), மருதமூப்பர் (42), வெள்ளைச்சாமி (24) உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்