காதல் கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் அளித்த வரதட்சணை புகாரின் பேரில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-09-19 19:06 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே உள்ள மலைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அழகு தமிழரசி (வயது 27) என்பவருக்கும் கடந்த 13-ந் தேதி காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது அழகு தமிழரசியின் குடும்பத்தினர் 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக வழங்கினர். இந்தநிலையில் செல்வகுமார் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து செல்வகுமார் சிலரின் தூண்டுதலின் பேரில் அழகு தமிழரசியை அடித்து துன்புறுத்தி, கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், மேலும் இதை வெளியே சொன்னால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அழகு தமிழரசி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செல்வகுமார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்