பா.ஜ.க.வினர் 6 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-10-07 21:00 GMT


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யை ராவணன் போல் பா.ஜ.க.வினர் சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதை கண்டித்து நேற்று முன்தினம் மாலை கோவை காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்தனர்.

மேலும் இந்த போராட்டத்தின் போது பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து பா.ஜ.க.வினரும் அங்கு திரண்டனர். பின்னர் காந்திபுரம் டவுன் பஸ்நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் காங்கிரஸ் கட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பா.ஜ.க.வினர் போலீசாரின் அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, மாநில துணைத்தலைவர் பிரீத்தி லட்சுமி, மாவட்ட துணை தலைவர் குமரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் 6 பேர் மீது சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறுகளை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்