சிறுமியை கிண்டல் செய்த 5 பேர் மீது வழக்கு

சிறுமியை கிண்டல் செய்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

Update: 2022-07-10 16:01 GMT

போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பரத் (வயது 25), மதன் (23). இவர்கள் 2 பேர் உள்பட 5 பேர் பேசி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள், பெற்றோருடன் வந்த சிறுமியை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதை தட்டி கேட்ட சிறுமியின் பெற்றோரை அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து போடி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ேபாலீசார் பரத் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்