அரசு பஸ்சை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்கு

அரசு பஸ்சை சேதப்படுத்திய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update: 2023-09-16 19:14 GMT

திருப்புவனம்

மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று புறப்பட்டு திருப்புவனம், மடப்புரம் வழியாக கண்ணாரிருப்பு கிராமத்திற்கு சென்றது. பஸ்சை மதுரை மாவட்டம் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி(வயது 40) ஓட்டி வந்தார். மடப்புரத்தை அடுத்த தேளி விலக்கு அருகே செல்லும்போது 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 5 பேர் திடீரென பஸ்சை வழிமறித்து பின்பக்க படிக்கட்டு அருகே உள்ள கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், பெத்தானேந்தல் அழகுசுந்தரம், பிரகாஷ், செல்லப்பனேந்தல் முகேஷ்கண்ணன் மற்றும் 17 வயது சிறுவன் என 5 பேர் மீது பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து சிறுவனையும், முகேஷ்கண்ணனையும் கைது செய்தார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்