கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

Update: 2023-03-11 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள பொய்யப்பாக்கத்தை சேர்ந்தவர் கனிமொழி(வயது 35). இவருக்கும் ஒருகோடி என்ற கிராமத்தை சேர்ந்த பிரபுவுக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி 3 மாதம் மட்டுமே குடும்பம் நடத்திய நிலையில் பிரபுவுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பது கனிமொழிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி தனது கணவர் பிரபுவிடம் கேட்டார். அதற்கு அவர், 12 பவுன் நகை, ரூ.13 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீதனப்பொருட்களுக்காகத்தான் உன்னை திருமணம் செய்தேன் என்று கூறியுள்ளார். மேலும் கனிமொழியை பிரபு, அவரது தந்தை ராமகிருஷ்ணன், தாய் நாவம்மாள், பிரபுவின் அண்ணன் முருகன், அவரது மனைவி ராஜகுமாரி ஆகிய 5 பேரும் சேர்ந்து திட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டனர். இதுகுறித்து கனிமொழி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பிரபு உள்ளிட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்