இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி உள்பட 40 பேர் மீது வழக்கு

ேசலம் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு நிர்ாவாகி உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-01-05 19:21 GMT

சேலம்:-

நங்கவள்ளியை சேர்ந்தவர் மாணிக்கம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா (வயது 29). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்திற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அவரது வலது கண்ணில் திடீரென வீக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு சத்யாவிற்கு டாக்டர்கள் ஊசி செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் கண்ணை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யாவின் உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளித்ததால் சத்யாவிற்கு பார்வை இழப்பு ஏற்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட டாக்டர்களை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் உள்பட 40 பேர் மீது சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்