விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

சாங்கியம் கிராமத்தில் விவசாயியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு;

Update: 2023-01-21 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள சாங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்(வயது 46). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது அதே ஊரை சேர்ந்த அண்ணாமலை மகன் சண்முகம், சேட்டு மகன் அப்பு, குப்புசாமி மகன் பிரவீன் மற்றும் தங்கவேல் மகன் ஏழுமலை ஆகிய 4 பேரும் சேர்ந்து குப்பனை சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து குப்பன் கொடுத்த புகாரின் பேரில் சண்முகம் உள்ளிட்ட 4 பேர் மீதும் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்