பெண்ணிடம் தகராறு: தட்டிக்கேட்ட தந்தை-மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தந்தை-மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-01 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் அமலதாஸ் மனைவி லீமாரோஸ் (வயது 40). விவசாயி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பிச்சை பிள்ளை மகன் பெரியசாமி என்பவருக்கும் வயலில் உள்ள வரப்பு பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று லீமாரோசுக்கும், பெரியசாமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பெரியசாமி, அவரது மகன் கோபி, மனைவி தவமணி மற்றும் அந்தோணிசாமி மகன் சேவியர் ஆகிய 4 பேரும் ஒன்று சேர்ந்து லீமாரோசிடம் தகராறு செய்ததுடன், அதனை தட்டி கேட்ட அவரது கணவர் அமலதாஸ் மற்றும் மகனையும் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து லீமா ரோஸ் கொடுத்த புகாரின் பேரில் பெரியசாமி உள்பட 4 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்