பள்ளி நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு
மாணவியின் தந்தைக்கு கொலை மிரட்டல்: பள்ளி நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஜோதிநகரில் வசிப்பவர் ஸ்ரீதர். இவரது 2 மகள்களும் ஆலங்குளத்தை அடுத்த அடைக்கலப்பட்டணத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு பயின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் பள்ளி நேரம் முடிந்து வெகுநேரம் ஆன பின்னரும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீதர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கிருந்த பள்ளி நிர்வாகி ராஜசேகர், அவரது மகன் ராஜ்குமார், பள்ளி முதல்வர் மகேஸ்வரி, துணை முதல்வர் சரளா ஆகியோர் அவரை அவதூறாக பேசி, செல்போனை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆலங்குளம் கோர்ட்டு உத்தரவின்படி ஆலங்குளம் போலீசார், பள்ளி நிர்வாகி ராஜசேகர் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.