முன்னாள் தாசில்தார் உள்பட 4 பேர் மீது வழக்கு
போலி ஆவணம் மூலம் நில மோசடி செய்த வழக்கில் முன்னாள் தாசில்தார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டனர்.
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் வசிப்பவர் கதிர்வேல். இவருக்கு சொந்தமான 337.5 சதுர மீட்டர் நிலத்தை அதே பகுதியில் வசிக்கும் நாராயணன், சின்னமுத்து ஆகியோர் முன்னாள் அருப்புக்கோட்டை மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், சூலக்கரைமுன்னாள் கிராம நிர்வாக அதிகாரி கணபதி சுப்புராம் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 9.1.2018-ல் போலி ஆவணம் மூலம் பதிவுசெய்து பட்டா ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை கோரியும் கதிர்வேல் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி சூலக்கரை போலீசார், நாராயணன், சின்னமுத்து, முன்னாள் துணை தாசில்தார் ரவிச்சந்திரன், முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி கணபதிசுப்புராம் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.