சாலைமறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு

வள்ளியூர் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;

Update: 2022-06-28 20:46 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரில் கடந்த சில வாரங்களாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் கண்ணநல்லூரில் உள்ள காமராஜர் சிலை முன்பு நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில் இதுகுறித்து வள்ளியூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்