அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு செய்யப்பட்டது.
மானூர்:
நெல்லையை அடுத்த ராமையன்பட்டி சங்குமுத்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 45). இவர் புதிதாக வீடு கட்டி, புதுமனை புகுவிழா நடத்தினார். அப்போது அங்கு அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாதி உணர்வை தூண்டும் வகையிலும் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
இதனை அறிந்த மானூர் போலீசார் விரைந்து சென்று, அந்த டிஜிட்டல் பேனரை அகற்றினர். மேலும் இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர் ரத்தினகுமார் மற்றும் டிஜிட்டல் பேனரை தயாரித்தவர், அதனை தெருவில் அமைத்தவர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.