பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

மானூர் அருகே பெண்ணை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-02-23 21:20 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் அல்போன்சா (வயது 60). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பு அதே ஊரைச் சேர்ந்த சகேயு (45), ரஞ்சித் (40) மற்றும் குட்டி ஆகியோர் நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட அல்போன்சாவை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்