விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்குவிவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

விவசாயியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-27 18:11 GMT

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே அரங்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 29). அதே பகுதியைச் சேர்ந்தவர் இவரது பெரிய்யப்பா கல்யாணசுந்தரம்(60). விவசாயிகளான இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே சொத்தில் பாகம் பிரிப்பது சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சொத்து சம்பந்தமாக சாமிநாதன், கல்யாணசுந்தரம் மற்றும் கல்யாணசுந்தரத்தின் மருமகன் ராஜேஷ் மற்றும் மகள் புவனேஸ்வரி ஆகியோர் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது 4 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்பு கல்யாணசுந்தரம் மற்றும் புவனேஸ்வரி இருவரும் திட்டியதாகவும், ராஜேஷ் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சாமிநாதன் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் சாமிநாதன் அளித்த புகாரின்பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேல்முருகன் இதுகுறித்து கல்யாணசுந்தரம், ராஜேஷ், புவனேஸ்வரி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்