தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

விழுப்புரம் அருகே தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

Update: 2023-01-10 18:30 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே பள்ளியந்தூரை சேர்ந்தவர் பூபாலன் (வயது 47). இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் சக்கரை என்பவர் பொதுவாக யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பூபாலன், சக்கரையிடம் சென்று எங்களைத்தான் திட்டுகிறாயா எனக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சக்கரை, அவரது மகன் ஹரிஹரன், மகள் சந்தியா ஆகிய 3 பேரும் சேர்ந்து பூபாலனையும், அவரது மனைவி கெங்கையம்மாளையும் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பூபாலன், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சக்கரை உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்