ராணுவ வீரரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே ராணுவ வீரரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-04-20 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள பெரியக்காள் நகரை சேர்ந்தவர் சஞ்சீவிராஜன் (வயது 63), முன்னாள் ராணுவ வீரர். இவரது வீட்டின் அருகே வசி்ப்பவர்கள் விஜயராணி, ராஜ்குமார், நிர்மலா. சஞ்சீவிராஜனுக்கும், இவர்கள் 3 பேருக்கும் இடையே பாதை பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் விஜய ராணி, ராஜ்குமார், நிர்மலா ஆகிய 3 பேரும் சேர்ந்து சஞ்சீவி ராஜன் வீட்டிற்குள் நுழைந்து அவரை தகாத வார்த்தைகளில் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜ்குமார் உள்பட 3 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்