மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-26 18:42 GMT

குளித்தலை போலீசார் நேற்று குளித்தலை-முசிறி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆற்று மணலை ஏற்றி வந்த சரக்கு வேனை பார்த்து நிறுத்தியுள்ளனர். போலீசார் நிற்பதை பார்த்த அந்த வேனில் வந்தவர்கள் வேனை அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து வேனுடன், கடத்தி வரப்பட்ட சுமார் 2 யூனிட் மணலை போலீசார் பறிமுதல் செய்து குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து ஆற்று மணலை சரக்கு வேனில் கடத்தி வந்த வேனின் உரிமையாளரான குளித்தலை அருகே உள்ள வை.புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் உள்பட 3 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஆற்று மணல் எங்கிருந்து கடத்தி வரப்பட்டு, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்