தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-06-15 19:10 GMT

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் கீழூரை சேர்ந்தவர் மணி மகன் அரிசுந்தர் (வயது 20). இவரது சகோதரி தேவிக்கும், இளையநயினார்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வகுமாருக்கும் (35) திருமணமாகியுள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து தேவி தனது சகோதரர் அரிசுந்தரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர், செல்வகுமாரை தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வகுமாரும், அவரது சகோதரர் ராஜ்குமாரும் (19) சேர்ந்து அரிசுந்தரை தாக்கியதாகவும், பதிலுக்கு அரிசுந்தர், ராஜ்குமாரை அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகராறில் அரிசுந்தர், ராஜ்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து 2 பேரும் தனித்தனியாக ஏர்வாடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், அரிசுந்தர், செல்வகுமார், ராஜ்குமார் ஆகிய 3 ேபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்