பங்க் மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
பங்க் மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
மதுரை தெப்பக்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் காமராஜர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த பெட்ரோல் பங்கில் 2 பேர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் பிடித்து விசாரித்தார். அதில் வண்டியூர் டோல்கேட் குறிஞ்சி நகரை சேர்ந்த மகாலிங்கம் (வயது 52), இஸ்மாயில்புரம் அருணாசலபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த மணிகண்டன்(26) என்பதும், அவர் பெட்ரோல் பங்க் மேலாளர் என்பதும் தெரியவந்தது. அரசு உத்தரவை மீறி சில்லரை விற்பனைக்கு பாட்டிலில் பெட்ரோல் கொடுத்ததாக அவர்கள் 2 பேர் மீது தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.