2 பேர் மீது வழக்கு

டாஸ்மாக்கடை ஊழியரை மிரட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-07-29 18:57 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றுபவர் முத்துகிருஷ்ணன் (வயது 40). இவர் கடையில் பணியில் இருக்கும் போது 2 பேர் அவரை மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்