புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தரகம்பட்டி அருகே உள்ள சிந்தாமணிபட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாப்பணம்பட்டியில் பரமேஸ்வரன் என்பவர் தனது பெட்டிக்கடையிலும், கீழசக்கரைகோட்டையில் பழனிச்சாமி என்பவர் தனது பெட்டிக்கடையிலும் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.