வக்கீலை தாக்கிய பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு
வக்கீலை தாக்கிய பெண் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
திருச்சி:
திருச்சி பாலக்கரை முதலியார்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(வயது 28). வக்கீல். இவர் தனது கட்சிக்காரரான லாவண்யா என்பவருக்கு ஆதரவாக பாலக்கரை போலீஸ் நிலையத்துக்கு சென்று இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பை சேர்ந்த கெம்ஸ்டவுன் பகுதியை சேர்ந்த டெய்சிராணி (30), அந்தோணிசாமி ஆகியோர் வக்கீல் ரவிக்குமாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மேலும், இது குறித்து பாலக்கரை போலீஸ் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில், டெய்சிராணி, அந்தோணிசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.