சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேர் மீது வழக்கு
சாத்தான்குளம் அருேக சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகேயுள்ள புதுக்கிணறு என்ற இடத்தில் தனிநபர் தேவாலயம் நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவாலயத்தில் அதிக சத்தமாக பாடல் ஒலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரண்டு நேற்று முன்தினம் சாத்தான்குளம்-திருச்செந்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட 15-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.