மது-கள் விற்ற 14 பேர் மீது வழக்கு

மது-கள் விற்ற 14 பேர் மீது வழக்கு

Update: 2023-05-15 19:33 GMT

தமிழகம் முழுவதும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், மது வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் போலீசார் நேற்று நடத்திய மது வேட்டையில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்து 33 லிட்டர் 300 மில்லி மது பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கள் விற்பனை செய்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 2 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்