சாலை மறியல் நடத்தியதாக 14 பேர் மீது வழக்கு
சாலை மறியல் நடத்தியதாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடகாடு:
வடகாடு அருகேயுள்ள மாங்காட்டில் நேற்று முன்தினம் பாதை பிரச்சினை தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் மாங்காடு பகுதியில் ஆலங்குடி-பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக கூறி மாங்காடு வாணியத்தெரு பகுதியை சேர்ந்த கைலாசம், சக்தி உள்பட 14 பேர் மீது வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.