தூத்துக்குடியில்பணம் வைத்து சூதாடிய 12 பேர் மீது வழக்கு

தூத்துக்குடியில்பணம் வைத்து சூதாடிய 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-05-15 18:45 GMT

தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, டி.ஆர்.நாயுடு தெருவில் உள்ள ஒரு கிளப்பில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று சூதாடிக் கொண்டு இருந்தவர்களை மடக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.28 ஆயிரம் ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 12 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்