இருதரப்பினர் மோதல்; 10 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-12-31 22:19 GMT

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரி (வயது 67). இவருடைய பேரன் கடந்த 29-ந் தேதி அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று அவனை கடிப்பதற்காக துரத்தியது. இதனால் ஆத்திரமடைந்த மாதேஸ்வரி அதே பகுதியை சேர்ந்த கனகா என்பவரது வீட்டுக்கு சென்றார். பின்னர் அவரிடம், உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய் என்னுடைய பேரனை கடிக்க துரத்தியது, ஏன் அதை கட்டி வைக்க மாட்டீர்களா? என்று கேட்டார்.

இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பு மோதலாக மாறியது. ஒருவரையொருவர் கைகளால் தாக்கி கொண்டனர். இதையடுத்து இதுகுறித்து இருதரப்பை சேர்ந்தவர்களும் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் இருதரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்