சிறுமியிடம் சில்மிஷம்; சிறுவன் மீது போக்சோவில் வழக்கு

Update: 2023-06-18 19:00 GMT

அரூர்:

அரூரை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த மாதம் 29-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த 5½ வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயை அந்த சிறுவன் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் 17 வயது சிறுவன் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்