மகேந்திரமங்கலம் அருகே அனுமதியின்றி கட்சி கொடி ஏற்றியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

Update: 2023-06-06 19:30 GMT

பாலக்கோடு

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள வெலாம்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் வெள்ளிச்சந்தை 4 ரோடு பகுதியில நேற்று பா.ஜ.க. கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.  இதையடுத்து அனுமதியின்றி கட்சி கொடி ஏற்றியதாக வெள்ளிசந்தை வருவாய் ஆய்வாளர் பாக்கியலட்சுமி மகேந்திரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கர் (வயது50) உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்