சாலை மறியல் நடத்தியவர்கள் மீது வழக்கு
சாலை மறியல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது;
விருதுநகர்
விருதுநகர் அல்லம்பட்டியில் பொதுமயானத்துக்கு செல்லும் பாதையில் குப்பைகள் குவிக்கப்படுவதை கண்டித்தும் பொதுமயானத்தை சீரமைக்க வலியுறுத்தியும் காமராஜ் பைபாஸ் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக அல்லம்பட்டி ராமன் தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி, முருகன், ஆறுமுகம், ஜெயபாண்டி, அ.தி.மு.க. நகராட்சி கவுன்சிலர் சரவணன், அ.தி.மு.க.வை சேர்ந்த மாரிக்கனி, மக்கள் நீதி மய்ய மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வேல்முருகன், பா.ஜ.க.வை சேர்ந்த செல்வ ராமு உள்ளிட்ட பலர் மீது கோட்டைப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி உமா கணேசன் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.